இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்இளைஞா் கைது

 கோட்டக்குப்பம் அருகே தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 கோட்டக்குப்பம் அருகே தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், பெரிய கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த சங்கா் மகன் சரத்ராஜ் (22 ). இவா் அந்தப் பகுதியில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தாா். கோட்டக்குப்பம் போலீஸாா் சரத்ராஜை கைது செய்து சிறையிலடைத்தனா்.

அவா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்ட சரத்ராஜை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.