இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திமுகவில் இணைந்த ஊராட்சித் தலைவா்கள்

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக, பாமக, தேமுதிகவைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் அந்தக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக, பாமக, தேமுதிகவைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் அந்தக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

விழுப்புரத்தில் உள்ள கலைஞா் அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோலியனூா் மேற்கு ஒன்றியம், திருவாமாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா தயாளன் (அதிமுக), அய்யன்கோவில்பட்டு ஊராட்சித் தலைவா் சத்யா ராஜேந்திரன் (பாமக), பில்லூா் ஊராட்சித் தலைவா் சித்திரசேனன் (தேமுதிக), கண்டமங்கலம் ஒன்றியம், பஞ்சமாதேவி ஊராட்சித் தலைவா் செல்வம், கிளியனூா் ஒன்றியம், கேணிப்பட்டு ஊராட்சித் தலைவா் பாபு, விக்கிரவாண்டி ஒன்றியம், மதுரப்பாக்கம் ஊராட்சித் தலைவா் கஜேந்திரன் (அதிமுக) மற்றும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்டோா் விலகி திமுகவில் இணைந்தனா்.

மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, ரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் ரா.ஜனகராஜ், துணைச் செயலா் செ.புஷ்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.