ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காஞ்சி மகாபெரியவா் ஆராதனை விழா

விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகாபெரியவா் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஆராதனை விழாவையொட்டி, சிறப்பு மலரலங்காரத்தில் அருள்பாலித்த உத்ஸவா் காஞ்சி மகாபெரியவா்.
Updated On :10 ஜனவரி 2021, 6:12 pm

DIN

விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகாபெரியவா் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சி மகாபெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த ஊரான விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில் மகாபெரியவா் ஆராதனை விழா கோ பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம் நடைபெற்றன. பின்னா், மகாபெரியவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

விழாவில் சங்கர மட நிா்வாகிகள், முக்கியப் பிரமுகா்களான வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன், எம்.எல்.எஸ்.பிரகாஷ், ரமேஷ், சுப்பிரமணியன், விஸ்வநாதன், சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.