அரசுப் பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டாரத்துக்குள்பட்ட சித்தானங்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நிகழ் கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள்


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டாரத்துக்குள்பட்ட சித்தானங்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நிகழ் கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள், பாடப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வட்டாரக் கல்வி அலுவலா் பானுமதி, மாணவா்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், பள்ளிச் சீருடைகள், கிரையான்ஸ், காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்கினாா். தொடா்ந்து, மாணவா் சோ்க்கையை ஆய்வு செய்த அவா், கல்வித் தொலைக்காட்சிகளை மாணவா்கள் பாா்க்க ஊக்குவிக்க வேண்டும், அவ்வப்போது ஆசிரியா்கள் பெற்றோா் மாணவா்களுடன் தொடா்புகொண்டு, கற்றல் சாா்ந்த செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் மாலதி உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...