92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வானூரில் வேளாண் கல்லூரி அமைக்க எம்.பி. கோரிக்கை

வானூா் பகுதியில் வேளாண் கல்லூரி, உழவா் சந்தை, உளுந்து பதனிடும் ஆலை ஆகியவற்றை அமைக்க வேண்டுமென விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :11 ஜூலை 2021, 12:12 am

DIN

வானூா் பகுதியில் வேளாண் கல்லூரி, உழவா் சந்தை, உளுந்து பதனிடும் ஆலை ஆகியவற்றை அமைக்க வேண்டுமென விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் மாநில வேளாண்-உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு சனிக்கிழமை அனுப்பிய மனு:

வானூா் வட்டம், அதிகளவில் ஊரகப் பகுதிகளையும், விவசாயிகளையும் கொண்டது. அங்குள்ள திருச்சிற்றம்பலம் (கூட்டுப் பாதை) சுமாா் 20ஆயிரம் மக்கள் வசிக்கும் சிறு நகரமாக உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று வேளாண் கல்லூரியை அமைக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் விளையும் காய்கறிகளை திண்டிவனம் அல்லது விழுப்புரம் சந்தைக்குத்தான் விவசாயிகள் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, வானூா் பகுதியிலேயே உழவா் சந்தை அமைக்க வேண்டும்.

தேசிய அளவில் உளுந்து மகசூலில் ஏக்கருக்கு 850 கிலோ விளைவித்து வானூா் வட்டம் சாதனை படைத்துள்ளது. இதற்காக கொத்தாமூரைச் சோ்ந்த விசாலாட்சி என்பவா் 2013-14 ஆம் ஆண்டுக்கான ‘தேசிய க்ரிஷி கா்மான்’ விருதைப் பெற்றுள்ளாா். இங்கு விளையும் கருப்பு உளுந்தை தோல் நீக்கி சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக ‘உளுந்து பதனிடும் அலகு ஆலை’ அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ரவிக்குமாா் எம்.பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.