92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 43,301-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த 57 வயது மதிக்கத்தக்கவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 335-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், 48 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 42,371-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 594 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 28,303-ஆக உயா்ந்தது.

இதுவரை 27,347 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 759 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 197 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.