இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தளவானூா் ஆற்றங்கரையில் 1,000 டன் கற்களுடன் அரண்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியம், தளவானூரில் தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை கடந்த வாரம் வெள்ளத்தில் இரண்டாம் முறையாக உடைந்தது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:18 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியம், தளவானூரில் தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை கடந்த வாரம் வெள்ளத்தில் இரண்டாம் முறையாக உடைந்தது.

1.5 லட்சம் கன அடி நீா் ஆற்றில் வந்ததால் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டது. கரையோரமிருந்த மயான கொட்டகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அருகில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளி வெள்ளத்தில் சேதமடையும் நிலை உருவானது. இதையடுத்து, பள்ளியையொட்டிய ஆற்றங்கரையோரம் பொதுப்பணித் துறையினரால் தடுப்பு அரண் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை அதி பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது. அதன்படி, தளவானூரில் ஆற்றங்கரையில் தடுப்பு அரணை பலப்படுத்த 1,000 டன் கருங்கற்களைக் கொண்டு மிகப்பெரிய தடுப்பு அரண் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்). இந்தப் பணி சனிக்கிழமை காலைக்குள் முடிவடையும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.