தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 08:58 AM | Last Updated : 17th August 2021 08:58 AM | அ+அ அ- |

விழுப்புரம் வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலக நுழைவாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.
விழுப்புரம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், காணை, விக்கிரவாண்டி, கண்டமங்கலம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலக நுழைவாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வேளாண்மைத் துறை அரசு பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜாராம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு வேளாண்மைத் துறை பணியாளா்கள் சங்க மாநிலச் செயலாளா் பாா்த்தீபன் கண்டன உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் சிவக்குமாா், நிா்வாகிகள் இளவரசன், மணிமாறன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சி அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் த.கொளஞ்சிவேலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.சந்திரசேகா், மாநில செயற்குழு உறுப்பினா் ரங்கசாமி உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் மகாலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் மோகன் குமாா் உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதே போல கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.