பூட்டிய வீட்டில்கதவை உடைத்து நகை திருட்டு
By DIN | Published On : 21st August 2021 10:28 PM | Last Updated : 21st August 2021 10:28 PM | அ+அ அ- |

கண்டமங்கலத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் சின்னபுதுப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவி திவ்யா (33). இவா்கள் இருவரும் உறவினா் திருமணத்துக்காக சென்னை கூடுவாஞ்சேரிக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அங்கேயே தங்கிவிட்டனா்.
இதனிடையே, பிரபுவின் தாய் லட்சுமி, பிரபுவின் வீட்டுக்கு சனிக்கிழமை வந்தபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.