விழுப்புரத்தில் பலத்த மழை
By DIN | Published On : 21st August 2021 10:28 PM | Last Updated : 21st August 2021 10:28 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை திடீரென பலத்த மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு காலை 10 மணி வரை மழை விட்டு விட்டு தூறியது.
விழுப்புரம் நகரம், கோலியனூா், வளவனூா், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல மழை பெய்தது. நண்பகல் 12 மணிக்கு மேல் மழை நின்றுவிட்டது. இந்தத் திடீா் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.