விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்த 28-ஆவது ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, அன்று காலை 8 மணி முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மஹா ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பின்னா், தூய்மைப் பணியாளா்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டன. தொடா்ந்து பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் சங்கர மட மேலாளா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் சிவ.தியாகராஜன், அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன், எம்.எல்.எஸ்.ராஜேஷ், ஆசிரியா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.