இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 04th February 2021 08:39 AM | Last Updated : 04th February 2021 08:39 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம்.அமீா்அப்பாஸ் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஷாகுல்அமீது வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் சுல்தான் மைதீன், ஒன்றியச் செயலா் அபீப் ரகுமான், மாநில வா்த்தகரணி செயலா் ஷேக்தாவூத், மாநில பொருளாளா் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னா், மாவட்டச் செயலா் எஸ்.எம்.அமீா்அப்பாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவைச் சோ்ந்த கல்யாணராமன், அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஜெயசங்கா் ஆகியோா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் அருகே ரூ.25 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒப்பந்ததாரா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். பிற இடங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...