தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. மண்டல மையத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 04th February 2021 08:37 AM | Last Updated : 04th February 2021 08:37 AM | அ+அ அ- |

விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தின் மாணவா் வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்புத் துறை ஆகியவை சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை ( பிப். 5) காலை 9 தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இதில், 60-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன.
முகாமில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2, பட்டதாரிகள், ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், நா்சிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இணையதள முகவரியில் தங்களது கல்வித் தகுதி விவரங்களைப் பதிவு செய்து கொண்டு, புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், சுய விவரக் குறிப்பு விவரங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாம் மூலம், தனியாா் துறையில் வேலை பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
விவரங்களுக்கு 04146 - 226417 என்ற தொலைபேசி எண்ணிலோ, நேரிலோ வந்து தகவல் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...