திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விடுபட்ட திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், குடும்ப அட்டை கோரி, குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் நா.அனந்தசயனத்திடம் விண்ணப்பம் அளித்த திருநங்கைகள்.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், குடும்ப அட்டை கோரி, குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் நா.அனந்தசயனத்திடம் விண்ணப்பம் அளித்த திருநங்கைகள்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விடுபட்ட திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநங்கைகளுக்கு அரசு அறிவிப்பின்படி, தனி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் விடுபட்ட திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கும் வகையில், அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமை வகித்து, குடும்ப அட்டையில்லாத திருநங்கைகளிடம் விண்ணப்பங்களைப் பெற்று, ஆவணங்களுடன் இணையத்தில் பதிவு செய்தாா். தனி வருவாய் ஆய்வாளா்கள் அன்பழகன், நவீன்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழுப்புரம் திருநங்கை சமுதாய மேம்பாட்டுச் சங்கத் தலைவா் சலீமா தலைமையில், திருநங்கையா் 15-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை வழங்கினா். விழுப்புரம் மாவட்டத்தில் 350 திருநங்கைகள் வரை வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பான்மையானவா்களுக்கு குடும்ப அட்டைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இதில், விடுபட்ட சுமாா் 50 பேருக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 வட்டங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் திருநங்கைகள் 34 போ் இணைய வழியில் விண்ணப்பித்தனா். அதில் 32 பேரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் நா.அனந்த சயனம் தலைமை வகித்து 20 விண்ணப்பங்களை பெற்றாா். இணையதளம் மூலம் வட்டப் பொறியாளா் சின்னதுரை பதிவேற்றம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com