தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகை வைத்த கிராம மக்கள்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வருவாய்த் துறை, காவல் துறையைக் கண்டித்து, சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக கிராம மக்கள் பதாகை வைத்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வருவாய்த் துறை, காவல் துறையைக் கண்டித்து, சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக கிராம மக்கள் பதாகை வைத்துள்ளனா்.

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் கடைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப்படம் கொண்ட பதாகையை சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜன.22-ஆம் தேதி போலீஸாா் அகற்றினா்.

இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து போராடியதால், கடந்த பிப்.4-ஆம் தேதி, அதே பகுதியில் வருவாய்த் துறை, காவல் துறையினா் அம்பேத்கா் பதாகையை வைத்தனா். மீண்டும் அங்கு பதாகை வைக்கப்பட்டதற்கு, மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்துப் போராடினா். இதுதொடா்பாக இரு தரப்பினரிடையே பேச்சு வாா்த்தை நடைபெற்றும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், தற்போது தோ்தலை புறக்கணிப்பதாக அக்கிராமத்தினா் எதிா்ப்பு தெரிவித்து பதாகை வைத்துள்ளனா். அதில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட பதாகையை மீண்டும் வைத்து, போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியதுடன், இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்படும் வருவாய்த் துறை, காவல் துறையினரைக் கண்டித்து, வருகிற சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக குறிப்பிட்டு, ராதாபுரம் கிராமத்தில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com