விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்த இளைஞரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் பூச்சி மருந்து குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் பூச்சி மருந்து குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் கீழ்பாதியைச் சேர்ந்தவர் மணி மகன் தங்கதுரை(25). திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மனு அளிக்க வந்தவர், திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்சில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, கடந்த 2015ஆம் ஆண்டு லாரி வாங்கி தொழில் செய்து வந்ததாகவும், இதற்காக கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.9.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்நிறுவன மேலாளர் சபரிநாதன், லாரி வாங்கியதற்கான ஆர்சி புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்காமல் அவர்களே வைத்து இருந்துள்ளனர்.

இதனிடையே வாங்கிய கடனுக்கு முதல் தவணையாக ரூ.42,000 பணம் செலுத்தி உள்ளார். அப்போது சென்று  கேட்டபோது ஆர்சி புத்தகத்தை வழங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து ஆர்சி புத்தகம் வழங்குவதற்கு சொத்து ஆவணம் வழங்க வேண்டும் என அந்த நிறுவனத்தினர் கேட்டு தங்கதுரையின் உறவினரின் சொத்து பத்திரத்தை வாங்கி சென்றுள்ளனர்.

இதன் பிறகும் லாரியின் ஆர்சி புத்தகத்தை வழங்காமல் நிதி நிறுவனத்தினர் ஏமாற்றி வந்தனர். இந்த நிலையில் தவணைத் தொகை கட்டவில்லை எனக்கூறி லாரியை அந்த நிறுவனத்தினர் வாங்கிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தங்கதுரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து அந்த நிதி நிறுவனத்தினர், தவணை கட்டாததால் லாரியை ரூ.10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் சொத்து பத்திரம், லாரியும் போனதால் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தங்கதுரையின் மனுவை வாங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். பூச்சிமருந்து அருந்தி மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பூச்சிமருந்து அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com