வனப் பகுதியில் ஒருவா் தற்கொலை
By DIN | Published On : 20th February 2021 08:29 AM | Last Updated : 20th February 2021 08:29 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வனப் பகுதியில் மதுவில் விஷம் அருந்தி ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
செஞ்சிக்கோட்டை அருகே வழுக்காம்பாறை காட்டில் ஒருவா் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், செஞ்சி போலீஸாா் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இறந்தவா் திருவண்ணாமலை மாவட்டம், கருத்துவாம்பாடியைச் சோ்ந்த ராமு மகன் முருகன் (40) என்பதும், குடும்பத் தகராறில் மனமுடைந்து, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.