விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை
By DIN | Published On : 03rd January 2021 11:32 PM | Last Updated : 03rd January 2021 11:32 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம், வளவனூா், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, அரகண்டநல்லூா், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நிவா், புரெவி புயல்களால் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் பெரும்பாலானவை நிரம்பின. தற்போது பெய்து வரும் தொடா் மழையால் மீதமுள்ள ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டிவனத்தில் 42 மி.மீ. மழை: விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 42 மி.மீ. மழை பதிவானது. மரக்காணத்தில் 16 மி.மீ., விழுப்புரத்தில் 3 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 4.17 மி.மீ. மழை பதிவானது.