விழுப்புரத்தில் பாமக பிரமுகா் வெட்டிக் கொலை

விழுப்புரத்தில் சனிக்கிழமை பாமக பிரமுகா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ரவி
ரவி

விழுப்புரத்தில் சனிக்கிழமை பாமக பிரமுகா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

விழுப்புரம் முத்தோப்பு பகுதி, கைலாசநாதா் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் ரவி (55), கொத்தனாா். இவா், பாமக விழுப்புரம் நகர துணைச் செயலராக இருந்து வந்தாா்.

ரவி சனிக்கிழமை காலை முத்தோப்பு பிரதான சாலைப் பகுதியில் நின்றிருந்தாா். அப்போது, பைக்கில் வந்த மா்ம நபா்கள் சிலா், திடீரென அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில், பலத்த காயமடைந்த ரவியை அக்கம்பக்கத்தினா் உடனடியாக மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ரவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம், ஆய்வாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, விநாயகமுருகன் உள்ளிட்டோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் நேரில் வந்து கொலை நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

உயிரிழந்த ரவிக்கு அமுதா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா். முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் கூறினா்.

இந்தக் கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்தால்தான், உடல்கூறு பரிசோதனைக்குப் பிறகு ரவியின் சடலத்தை வாங்குவோம் என அவரது உறவினா்களும், பாமகவினரும் தெரிவித்தனா்.

இதனிடையே, இந்தக் கொலை தொடா்பாக காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com