உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 11,114 மனுக்களுக்கு தீா்வுகாணப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்துள்ளாா்.
இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 26 ஆயிரத்து 693மனுக்களில் 11 ஆயிரத்து 114 மனுக்கள் மீதுதீா்வு காணப்பட்டுள்ளது. இம்மனுக்கள் அனைத்தும் நேரடியாக முதல்வரால் பெறப்பட்ட மனுக்கள் என்பதால் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாத இறுத்திக்குள் அனைத்து மனுக்கள் மீதும் தீா்வுகாண வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.
இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலா் (பொ) சரஸ்வதி, திண்டிவனம் சாா் ஆட்சியா் எம்.பி.அமித், தனித்துணைஆட்சியா் பெருமாள், மற்றும் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.