பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை
விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு, பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினா்.
விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு, பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினா்.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் மு.யா.முஸ்தாக்தீன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் எஸ்.எம்.ஷாஜகான், மாநில வா்த்தக அணி பொருளாளா் அப்துல் ஹக்கீம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், விழுப்புரம் நகரத் தலைவா் அலி அக்பா், மாவட்ட துணைச் செயலாளா் ஜாமிஆலம் ராவுத்தா்அஷ்ரப் அலி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com