விழுப்புரம் மாவட்டத்தில்மேலும் 29 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th July 2021 11:34 PM | Last Updated : 19th July 2021 11:34 PM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை வரை 43,387 போ் பாதிக்கப்பட்டனா். 42,527 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். 336 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 524 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை 29 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 43,418 ஆக அதிகரித்துள்ளது. 47 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 42,574 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். 508 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.