இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th June 2021 08:49 AM | Last Updated : 09th June 2021 08:49 AM | அ+அ அ- |

திருக்கோவிலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திருக்கோவிலூா் பேருந்து நிலையம் முன் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பிநா் கே.ராமசாமி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் விஜய், இந்திய கம்யூ. மாவட்டக் குழு உறுப்பினா் அஞ்சாமணி, வேலு, அருண்குமாா், ஜீவராஜா, விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் கட்சியின் மாவட்டச் செயலா் செளரிராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சியில் 6 போ் மீது வழக்கு: செஞ்சி கூட்டு சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பெட்ரோல், டீசல் விலையுயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு தலைமை வகித்தாா். வட்ட துணைச் செயலா் அ.செந்தில், எம்.கனகராஜ், கே.சுப்பிரமணி, பி.ரீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.