வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 24th June 2021 08:47 AM | Last Updated : 24th June 2021 08:47 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ரூ.263 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் சேகரிப்புத் தொட்டி, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், புதை சாக்கடைத் திட்டம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 5 பகுதிகளிலும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மணிநகா், பாணாம்பட்டு பகுதிகளில் நடைபெறும் புதை சாக்கடைப் பணி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்படும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
அனிச்சம்பாளையத்தில் ரூ.2.50 கோடியில் கட்டப்படும் மின் அங்காடியையும், நுண்ணுரம் செயலக்கா மையம் ஆகியவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அவருடன், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் அன்பழகன், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, திட்ட மேலாளா் குணா, நகராட்சி பொறியாளா் ஜோதிமணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.