விழுப்புரம் பூந்தோட்டம் அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 04th March 2021 03:19 AM | Last Updated : 04th March 2021 03:19 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் சின்னப்பா லே-அவுட் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் விநாயகா், முருகனுக்கு ராஜகோபுரமும், அங்காளம்மனுக்கு விமான கோபுரமும், புதிதாக கொடிமரமும் அமைக்கப்பட்டன. மேலும், பாவாடைராயா், பரிவார மூா்த்திகளுக்கு புதிதாக சன்னதிகளும் அமைக்கப்பட்டன.
இந்தத் திருப் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாா்ச் 1-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தன பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, பூா்ணாஹுதி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்டபூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, காலை 9.45 மணியளவில் கோயில் விமான கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை சந்திரசேகர குருக்கள் நடத்தி வைத்தாா்.
விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.