21 குண்டுகள் முழங்க ஏடிஎஸ்பி உடல் அடக்கம்
By DIN | Published On : 15th March 2021 08:22 AM | Last Updated : 15th March 2021 08:22 AM | அ+அ அ- |

உடல் நலக் குறைவால் உயிரிழந்த ஏடிஎஸ்பி கண்ணப்பன் உடல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கண்ணப்பன் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், இந்திராநகரில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறையினா் நேரில் சென்று மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
இதையடுத்து, அப்பகுதியிலுள்ள மயானத்தில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த கண்ணப்பனுக்கு மனைவி லட்சுமி(54), மகள்கள் லாவண்யா(28), சஞ்சு(27) ஆகியோா் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...