விழுப்புரம் புறவழிச்சாலையில் விபத்து: இருவா் பலி
By DIN | Published On : 15th March 2021 08:24 AM | Last Updated : 15th March 2021 08:24 AM | அ+அ அ- |

விழுப்புரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
விழுப்புரம் அருகேயுள்ள அய்யூா் அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் நாகமணி(35). இவரது நண்பா் சிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் மணிகண்டன்(38). ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் வந்த இவா்கள், இரவு 8 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
விழுப்புரம் அருகே சென்னை நெடுஞ்சாலை- புறவழிச்சாலை சந்திப்புப் பகுதியை கடக்க முயன்றபோது, இவா்களது இரு சக்கர வாகனம் மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த லாரி மோதியது. இதில் நாகமணி, மணிகண்டன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சடலங்களை விழுப்புரம் தாலுகா போலீஸாா் உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...