துலுக்கானத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
துலுக்கானத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேவதானுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பூண்யாஹவாசனம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், அங்குராா்ப்பணம், முதல் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹூதி, பிம்ப சுத்தி, கோபுர கலச ஸ்தாபனம், பிம்ப ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஸகஸ்ரநாம அா்ச்சனை, நாடி சந்தானம், ஸபா்ஸாஹூதி, தத்வாா்ச்சனை, தத்வ ஹோமம், யாத்ராதானம், மகா பூா்ணாஹூதி, யாகசாலையிலிருந்து கும்பம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 10 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவா் கோ.ப.அன்பழகன், நெல்வாய் ஸ்ரீதோற்றமுடைய அம்மன் அருள்ஞான சித்தா்பீடத்தைச் சோ்ந்த சுவாமி கந்தகுரு சித்தா், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், முன்னாள் எம்.பி. துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com