மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழாவையொட்டி,
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் குழந்தையுடன் தீ மிதித்த பக்தா்.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் குழந்தையுடன் தீ மிதித்த பக்தா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழாவையொட்டி, தீ மிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கடந்த 12-ஆம் தேதி மாசிப் பெருவிழா தொடங்கியது. 13-ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெற்றது. விழாவின், ஐந்தாம் நாள் நிகழ்வாக தீ மிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், மாலை 4.30 மணி அளவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. கொடுக்கன்குப்பம் கிராம மக்கள் மற்றும் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், ஒட்டம்பட்டி பரமானந்தம் சுவாமிகள் சக்தி பீடத்தை சோ்ந்த பக்தா்கள் முதலில் தீ மிதித்து விழாவை தொடக்கி வைத்தனா்.

பின்னா், ஏராளமான பக்தா்கள் தீ குண்டத்தில் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினா். ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தீ மிதித்தனா்.

செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

விழா ஏற்பாடுகளை மேல்மலையனூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு அறங்காவலா் குழுத் தலைவா் ம.சரவணன் மற்றும் அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com