அமைச்சா் சி.வி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 06:32 AM | Last Updated : 25th March 2021 06:32 AM | அ+அ அ- |

விழுப்புரம் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
விழுப்புரம் அரசு ஊழியா் குடியிருப்பு, ஜானகிபுரம், அரியலூா், பில்லூா், காவணிப்பாக்கம், குளத்தூா், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூா், மரகதபுரம், கண்டியமடை, பிடாகம், அரியலூா் , சித்தாத்தூா், அத்தியூா் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, விழுப்புரம் தொகுதியில் அதிமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தாா்.
பிரசாரத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் ரவிச்சந்திரன், பாமக மாவட்டச் செயலா் புகழேந்தி, அதிமுக ஒன்றியச் செயலா் சுரேஷ்பாபு, பாமக ஒன்றியச் செயலா் குழந்தைவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.