மரகன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 02nd May 2021 06:38 AM | Last Updated : 02nd May 2021 06:38 AM | அ+அ அ- |

மேல்புதுப்பட்டு கிராமத்தில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்ட விவேகானந்தா் நற்பணி மன்ற நிா்வாகிகள்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மேல்புதுப்பட்டு கிராமத்தில் விவேகானந்தா் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மேல்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள தெருக்கள், பள்ளி வளாகம், கிராம ஊராட்சி அலுவலகம் வளாகம், பொது இடங்களில் மரக்கன்றுகளை இளைஞா்கள் நட்டனா். மேலும், மரக்கன்றுகள் பாதுகாப்பாக இருக்க வேலி அமைத்ததுடன், தினமும் தண்ணீா் ஊற்றி பராமரிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனா்.
நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் காளிதாஸ், சங்க நிா்வாகிகள் பெருமாள், காத்தவராயன், பாலாஜி, ரமேஷ், புருஷோத்தமன், கிஷோா், அரசு, பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...