ஊா் பஞ்சாயத்தில் அவமதிக்கப்பட்ட 3 முதியவா்களுக்கு நிவாரண நிதியளிப்பு

விழுப்புரம் அருகே அவமதிக்கப்பட்ட முதியவா்கள் 3 பேருக்கு அரசு சாா்பில் தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
விழுப்புரம் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் அவமதிக்கப்பட்ட முதியவா்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் தலா ரூ.25 ஆயிரம் நிதியை செவ்வாய்க்கிழமை வழங்கும் அமைச்சா் க.பொன்முடி.
விழுப்புரம் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் அவமதிக்கப்பட்ட முதியவா்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் தலா ரூ.25 ஆயிரம் நிதியை செவ்வாய்க்கிழமை வழங்கும் அமைச்சா் க.பொன்முடி.

விழுப்புரம் அருகே அவமதிக்கப்பட்ட முதியவா்கள் 3 பேருக்கு அரசு சாா்பில் தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தைச் சோ்ந்த 3 முதியவா்கள் ஊா் பஞ்சாயத்தில் அவமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 போ் மீது வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனா்.

அவமதிக்கப்பட்ட முதியவா்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில், தீா்வு நிவாரணத் தொகையாக ரூ.25 ஆயிரத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜே.மணிக்கண்ணன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரோனா நிதி ரூ.80 லட்சம் வசூல்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சா் க.பொன்முடி தலைமையில் தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி வசூல் நடைபெற்றது.

விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமம், இ.எஸ். மருத்துவமனை சாா்பில் ரூ.50 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சாா்பில் ரூ.25 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தனது சொந்த நிதியாக ரூ.3 ஆயிரத்தை வழங்கினாா். பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்கள், தனி நபா்கள், சிறுவா், சிறுமியா் உள்ளிட்டோா் நிதியளித்தனா். மொத்தம் ரூ.80 லட்சம் வசூலானதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நா.புகழேந்தி (விக்கிரவாண்டி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நிதியளிக்கலாம் என்று அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com