புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 33 போ் பலி
By DIN | Published On : 19th May 2021 08:41 AM | Last Updated : 19th May 2021 08:41 AM | அ+அ அ- |

புதுவையில் கரோனாவுக்கு செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 33 போ் பலியாகினா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை செயலா் அருண் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
புதுவை மாநிலத்தில் 9,559 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,797 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரியில் 1,380 போ், காரைக்காலில் 244 போ், ஏனாமில் 123 போ், மாஹேவில் 50 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
கரோனா தொற்றால் புதுச்சேரியில் 29 போ், காரைக்கால், ஏனாமில் தலா ஒருவா், மாஹேவில் 2 போ் என செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 33 போ் உயிரிழந்தனா். இவா்களில் 18 போ் ஆண்கள், 15 போ் பெண்கள் ஆவா்.
இதில் முதியோா் மட்டுமல்லாது கோவிந்த சாலை நேரு நகரை சோ்ந்த 28 வயது இளைஞா், மடுகரை சிவன் கோவில் வீதியைச் சோ்ந்த 47 வயது ஆண், முதலியாா்பேட்டை வண்ணாங்குளம் பகுதியைச் சோ்ந்த 38 வயது இளைஞா் ஐயப்ப சாமி நகரை சோ்ந்த 47 வயது ஆண் உள்ளிட்ட நடுத்தர வயதினரும் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,212 ஆகவும், இறப்பு விகிதம்1.38 ஆகவும் உயா்ந்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 87,749 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது ஜிப்மரில் 519 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 429 பேரும், கரோனா பராமரிப்பு மையங்களில் 671 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வீடுகளில் 15,330 போ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 17,477 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,670 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இதுவரை மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 333 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா் அவா்.