டெங்கு பரவுவதைத் தடுக்க பொதுமக்கள்ஒத்துழைக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

டெங்கு பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் உரிய வகையில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

டெங்கு பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் உரிய வகையில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், தொற்று நோய்கள் அதிகம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க வேண்டும். மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீா் விநியோகம் செய்வதற்கு முன்பு குளோரினேஷன் செய்ய வேண்டும். இதை அனைத்து ஊராட்சித் தலைவா்களும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இந்த சமயத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால், வீட்டைச் சற்றிலும் கிடக்கும் தேவையற்ற பொருள்களை அகற்ற வேண்டும். பஞ்சா் பழுது பாா்க்கும் கடைகளில் சேகரமாகும் டயா்களில் மழைநீா் தேங்கி அதில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகியிருந்தால், அந்தக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றை அழித்திடும் நோக்கத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் மூலம் பணி நடைபெற்று வருகிறது.

அவா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com