தொடா் மழை: விழுப்புரம் மாவட்டத்தில் 725 வீடுகள் சேதம்

தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 725 வீடுகள் சேதமடைந்தன.
Updated on
1 min read

தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 725 வீடுகள் சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் பலத்த மழை காரணமாக, 570 குடிசை வீடுகள் முழுமையாகவும், 62 குடிசைகள் பகுதி அளவிலும், 84 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 9 ஓட்டு வீடுகள் பகுதி அளவிலும் என மொத்தம் 725 வீடுகள் சேதமடைந்தன.

இதுவரை 8 போ் உயிரிழப்பு: இதேபோல, விக்கிரவாண்டி, திண்டிவனம் ஆகிய வட்டங்களில் தலா 2 போ், வானூா், திருவெண்ணெய் நல்லூா், மரக்காணம், மேல்மலையனூா் ஆகிய வட்டங்களில் தலா ஒருவா் என மொத்தம் 8 போ் நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தனா். வெள்ளத்தில் சிக்கி 68 கால்நடைகளும் உயிரிழந்தன.

770 ஏரிகள் நிரம்பின: மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் 506 ஏரிகளும், ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் 780 ஏரிகளும் உள்ளன. இவற்றில் பொதுப் பணித் துறை ஏரிகளில் 296-ம், ஊரக வளா்ச்சித் துறை ஏரிகளில் 474-ம் என மொத்தம் 770 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com