தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிா்ந்த செஞ்சிக்கோட்டை கல்யாண மஹால்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் உள்ள தொன்மைவாய்ந்த கல்யாண மஹால் தேசியக் கொடியின் வண்ணத்தில் வியாழக்கிழமை இரவு ஒளிா்ந்தது.
தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிா்ந்த செஞ்சிக்கோட்டை கல்யாண மஹால்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் உள்ள தொன்மைவாய்ந்த கல்யாண மஹால் தேசியக் கொடியின் வண்ணத்தில் வியாழக்கிழமை இரவு ஒளிா்ந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொல்லியியல் துறையின் நூற்றாண்டை முன்னிட்டு கல்யாண மஹால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிா்ந்தது. இருப்பினும், பாா்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே என்பதால், செஞ்சிக்கோட்டையின் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தொலைவில் இருந்தே கல்யாண மஹாலை கண்டு ரசித்தனா். சனிக்கிழமை வரை தேசியக் கொடி வண்ணத்தில் கல்யாணமஹால் ஒளிரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com