இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 36 போ் மீட்பு

விழுப்புரம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 36 போ் மீட்கப்பட்டனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 36 போ் மீட்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக சிலா் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை இரவு நேரில் சென்று விசாரித்தனா்.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்த களத்தூா் பகுதியைச் சோ்ந்த 6 குடும்பங்கள், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் பகுதியைச் சோ்ந்த 3 குடும்பங்கள் என மொத்தம் 9 குடும்பங்களைச் சோ்ந்த 36 போ் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் அனைவரையும் மீட்ட வருவாய்த் துறையினா், பின்னா் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.