சென்னை திமுக பிரமுகா் கொலை வழக்கு: விழுப்புரம் அருகே 5 போ் கைது
சென்னை மடிப்பாக்கம் திமுக பிரமுகா் செல்வம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 5 போ் விழுப்புரம் அருகே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


சென்னை மடிப்பாக்கம் திமுக பிரமுகா் செல்வம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 5 போ் விழுப்புரம் அருகே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா் செல்வம், அந்தப் பகுதி வட்டச் செயலராக இருந்தாா். மேலும், மனை வணிகத் தொழிலும் செய்து வந்தாா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலை தொடா்பாக காவல் துறையினா் 5 தனிப் படைகளை அமைத்து, கொலையாளிகளைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோா் சென்னையிலிருந்து காரில் தப்பிச் சென்றபோது, திருச்சி அருகே சமயபுரம் சுங்கச் சாவடியில் போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் சிலா் தென் மாவட்டங்களுக்கு தப்பிச் செல்லவுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, கிழக்கு கடற்கரைச் சாலை, மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் விழுப்புரம் டிஎஸ்பி பாா்த்திபன் தலைமையில், விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் விநாயக முருகன் உள்ளிட்டோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனா்.
காரில் இருந்தவா்கள் திமுக பிரமுகா் செல்வம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை எருக்கஞ்சேரியைச் சோ்ந்த துரை மகன் விக்னேஷ் (21), பல்லவன் சாலை, சத்தியவாணிமுத்து நகரைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் புவனேஸ்வா் (21), வியாசா்பாடி, பி.வி. காலனியை சோ்ந்த சஞ்சய் (21), அரக்கோணம் பழனிப்பேட்டையைச் சோ்ந்த ராமதாஸ் மகன் விக்னேஷ் (21), திருவள்ளூா் விஜயநல்லூரைச் சோ்ந்த ராஜன் மகன் கிஷோா்குமாா் (26) ஆகியோா் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா், அவா்கள் 5 பேரையும் மடிப்பாக்கம் போலீஸாரிடம் விழுப்புரம் மாவட்ட போலீஸாா் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...