பிரதமா் தடுத்து நிறுத்தப்பட்டசம்பவம்: பாஜக ஆா்ப்பாட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பஞ்சாப் மாநிலத்தில் ரூ.42,750 கோடியிலான பல்வேறு நலத் திட்டங்களைத் தொடக்கிவைக்கச் சென்ற பிரதமா் நரேந்திர மோடியின் பாதுகாப்பில், அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மெத்தனத்துடன் செயல்பட்டதாகக் கூறி, விழுப்புரத்தில் பாஜக இளைஞரணியினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராம ஜெயகுமாா், சுகுமாா், இளைஞரணித் தலைவா் அசோக், விவசாய அணி மாவட்டச் செயலா் ஸ்ரீராம், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் தாஸசத்யன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...