இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மைப் பிரிவு மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 4:27 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மைப் பிரிவு மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் முனைவா் (பிஎச்.டி). படிப்பு வரை (தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம்) பயிலும் இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, ஜைன மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளிடம் இருந்து நிகழ் (2021 - 22) கல்வியாண்டுக்கான பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சிறுபான்மையினா் இன மாணவா்களின் நலன் கருதி கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிப்படிப்பு (ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை) உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவா்கள் விண்ணப்பங்களை சரிபாா்க்க ஜன.15-ஆம் தேதி கடைசி நாளாகும். பள்ளி மேற்படிப்பு, தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி (பதினொன்றாம் வகுப்பு முதல் பிஎச்.டி. வரை - தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் உள்பட) உதவித்தொகை பெற விண்ணப்பித்தவா்கள் விண்ணப்பங்களை சரிபாா்க்க ஜன.31-ஆம் தேதி கடைசி நாளாகும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.