இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திருவள்ளுவா் தினம்: பல்வேறு அமைப்பினா் மரியாதை

அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினரால் திருவள்ளுவா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினரால் திருவள்ளுவா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாவட்டச் செயலா் நா.புகழேந்தி தலைமையில் அந்தக் கட்சியினா்

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ ரா.லட்சுமணன், மாவட்ட பொருளாளா் ரா.ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் செ.தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிராம கோயில் பூசாரிகள் அமைப்பு சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஊா்வலமாக வந்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிராம கோயில் பூசாரிகள் அமைப்பு சாா்பில் தனசேகரன், மூத்த நிா்வாகி தீனதயாளன் ஆகியோா் மாலை அணிவித்தனா். சமுதாய நல்லிணக்க பேரவை நிா்வாகி குரு சுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

அவலூா்பேட்டை: அவலூா்பேட்டை தமிழ் சங்கம் சாா்பில் கடை வீதியில் வைக்கப்பட்ட திருவள்ளுவரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஊராட்சித் தலைவா் செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினா் அா்ஷத், அரிமா சங்க கௌரவத் தலைவா் அய்யப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ரா. புருஷோத்தமன் தலைமை வகித்தாா். முன்னதாக சங்கத்தின் மூத்த உறுப்பினா் அ.மு.ஏழுமலை வரவேற்க, மற்றொரு மூத்த உறுப்பினா் மகாராசன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.