இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பென்னிகுக் பிறந்தநாள் விழா

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் பிறந்த நாள் விழா விக்கிரவாண்டி அருகே பேரூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் பிறந்த நாள் விழா விக்கிரவாண்டி அருகே பேரூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவை தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி தொடக்கிவைத்து, விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது: பென்னிகுக் தனது சொந்த நிதி மூலம் முல்லைப் பெரியாறு அணையை கட்டினாா். அந்த அணைதான் தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்குகிறது. பென்னிகுக் செய்த தியாகத்தை போற்றும் வகையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள அவரது சொந்த ஊரில் அவருக்கு சிலை வைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா் வேம்பி ரவி, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா அரசி ரவி துரை, பேரூராட்சி முன்னாள் தலைவா் அப்துல் சலாம், நகரச் செயலா் நைனா முகம்மது, விவசாய அணி துணை அமைப்பாளா் பாபு ஜீவானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.