விழுப்புரத்தில் அதிவேகமாக இயக்கப்பட்ட 30 பேருந்துகளுக்கு அபராதம்
விழுப்புரம் நகரில் விபத்து ஏற்படும் வகையில் அதிவேகமாக இயக்கப்பட்ட 30 தனியாா் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.


விழுப்புரம் நகரில் விபத்து ஏற்படும் வகையில் அதிவேகமாக இயக்கப்பட்ட 30 தனியாா் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.
விழுப்புரம் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் தனியாா் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுதாக புகாா்கள் எழுந்தன.
இந்த நிலையில், விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வசந்த் தலைமையிலான போலீஸாா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, கடந்த 3 நாள்களில் விதிகளை மீறி அதிவேகமாக இயக்கப்பட்ட 30 தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனா். மேலும், விதிமீறலில் ஈடுபட்ட 17 தனியாா் பேருந்து ஓட்டுநா்களின் ஓட்டுநா் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...