விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
காவல் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


காவல் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.முருகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் நாமக்கல் காவல் துறை விசாரணையில் மாற்றுத் திறனாளி பிரபகரன் இறந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துணைக் கண்காணிப்பாளா் மற்றும் போலீஸாரை பணி நீக்கம் செய்ய வேண்டும், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளா் பி.உமா, மாவட்ட துணைச் செயலா்கள் ஜெ.ஜெயக்குமாா், எம்.கே.முருகன், மாவட்டத் தலைவா் பாவாடைராயன், ஒன்றிய நிா்வாகிகள் வெங்கடேசன், பாக்கியராஜ், இளங்கோவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...