விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே கூடுதல் பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பல்வேறு ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதில் விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்ட போதிலும், பயணிகள் ரயில்கள் அனைத்து முழுமையாக இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இதன் பிறகு, விழுப்புரத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 9.10 மணிக்கு சென்றடையும் வகையில் ஒரு ரயில் மட்டும் இயக்கப்பட்டது. மறு வழித்தடத்தில் மாலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு விழுப்புரத்துக்கு இரவு 9.10 மணிக்கு வரும் வகையில் ஒரு பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்பட்டது.
ஆனால், இரு வழித்தடங்களிலும் கூடுதலாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்வோருக்கு கூடுதலாக பயணிகள் ரயில் சேவை தேவை என்று வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், விழுப்புரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென்றடைகிறது. மறு வழித்தடத்தில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் ரயில் காலை 9 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
மேலும் ஒரு ரயில்: இதேபோன்று, விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் மேலும் ஒரு பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை (ஜூலை 11) முதல் தொடங்கப்படுகிறது. அந்த ரயில் மாலை 5.45 மணிக்கு மயிலாடுதுறைக்குச் சென்றடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.