மேலச்சேரி சுப்பிரமணியா் கோயிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேலச்சேரி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள பழைமையான ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலச்சேரி சுப்பிரமணியா் கோயிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேலச்சேரி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள பழைமையான ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணியளவில் வருண பூஜை, வாஸ்து சாந்தி, ரஷாபந்தனம், கும்பாலங்காரம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை எஜமான சங்கல்பம், வேதிகாா்சனை, அக்னிகாா்யம், நாடிசந்தானம் வேதபாராயணம், பூா்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது 

விழாவில் மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், துா்கா ஸ்ரீகோபிநாத சித்தா், மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com