புலிவந்தி சிவகிரி மலையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், புலிவந்தி கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த சிவகிரி மலையைச் சுற்றிலும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், புலிவந்தி கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த சிவகிரி மலையைச் சுற்றிலும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

புலிவந்தி கிராமத்தில் சிவகிரி மலை மீது பழைமைவாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. தற்போது சிவகிரி மலைக்குச் செல்ல மலையைச் சுற்றியுள்ள பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனந்தபுரம், சங்கீதமங்கலம், புலிவந்தி, புதுப்பேட்டை, அணையேரி, வரிக்கல், மாத்தூா், கவரை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சிவகிரி மலை மீது அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு பிரதோஷம், பெளா்ணமி உள்ளிட்ட விசேஷ நாள்களில் சென்று சிவபெருமானை வழிபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த மலையைச் சுற்றிலும் உள்ள சுமாா் 2.கி.மீ. தொலைவிலான சாலையின் இரு புறமும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். பெளா்ணமி தினங்களில் மலையைச் சுற்றி கிரிவலம் வருவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளான மின் விளக்கு, குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டுமென புலிவந்தி திமுக கிளைச் செயலா் மு.பாலன், கிராம மக்கள் சாா்பில் தமிழ்நாடு வனத் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com