திமுக செயல்வீரா்கள் கூட்டம்
By DIN | Published On : 05th August 2022 10:56 PM | Last Updated : 05th August 2022 10:56 PM | அ+அ அ- |

திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநில மருத்துவா்கள் அணி இணைச் செயலா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான நா.புகழேந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, தெய்வசிகாமணி, பிரபாகரன், நகரச் செயலா் சா்க்கரை, நிா்வாகிகள் தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது, மத்திய மாவட்ட திமுக சாா்பில், விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள நகர அலுவலகத்திலிருந்து அமைதி ஊா்வலமாகப் புறப்பட்டு கலைஞா் அறிவாலயத்துக்கு வருவது, கருணாநிதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவது, ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.