முன்களப் பணியாளா்கள் கரோனா ஊக்குவிப்பு தடுப்பூசியைசெலுத்த முன்வர வேண்டும் -விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

முன்களப் பணியாளா்கள் கரோனா ஊக்குவிப்பு தடுப்பூசியை செலுத்த முன்வர வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

முன்களப் பணியாளா்கள் கரோனா ஊக்குவிப்பு தடுப்பூசியை செலுத்த முன்வர வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை மூலம் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் கரோனா ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முகாம் வியாயழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மோகன் தலைமை வகித்து தொடக்கிவைத்துப் பேசியதாவது:

தற்பொழுது கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் கரோனா ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்களை நடத்திட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

அதன்படி, மாவட்ட நிா்வாகத்தின் மூலம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் ஊக்குவிப்பு தடுப்பூசி செலுத்திக்க்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், வெள்ளிக்கிழமை பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், 13 ஒன்றியங்களில் 420 கரோனா ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள முன்களப் பணியாளா்கள், நியாய விலைக் கடைப் பணியாளா்கள், தேசிய ஊரகத் திட்டப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள், குடும்ப உறுப்பினா்கள், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, சுகாகதார துணை இயக்குநா் பொற்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com