செஞ்சி அரசு கல்லூரியில் ஆக.29-இல் மூன்றாம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு
By DIN | Published On : 24th August 2022 03:18 AM | Last Updated : 24th August 2022 03:18 AM | அ+அ அ- |

செஞ்சி அரசு கலை,அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) இல.ரவிசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரியில் மூன்றாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
30-ஆம் தேதி பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
பி.எஸ்.சி. பாடப் பிரிவுக்கு கட்டணம் ரூ.3080 ஆகும். மற்ற பாடப் பிரிவுகளுக்கு ரூ 3660 ஆகும்.
மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், அசல், நகல் 2, பள்ளி மாற்று சான்றிதழ் அசல், நகல் 2, சாதிச் சான்றிதழ் அசல், நகல் 2, மாா்பளவு புகைப்படம் 5, வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதாா் அடையாள அட்டை நகல் 2 மற்றும் உரிய சோ்க்கை கட்டணத்துடன் வர வேண்டும் என்றாா் அவா்.